அநியாயத்துக்கு சம்பளம் கேட்கும் விஜய் சேதுபதி.. அ ல றி ய டித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!!

123

விஜய் சேதுபதி……

மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் சினிமா கேரியர் பத்து மடங்காக உயர்ந்துள்ளது. பவானி கதாபாத்திரம் தமிழில் மட்டுமல்லாமல் மாஸ்டர் படம் வெளியான அனைத்து மொழிகளிலும் அனைவரையும் கவர்ந்துவிட்டது.

குறிப்பாக ஆந்திர சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருமே மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை மேடைக்கு மேடை புகழ்ந்து தள்ளுகின்றனர். சமீபத்தில்கூட மெகா ஸ்டார் சிரஞ்சீவி பவானி கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் உப்பண்ணா என்ற படம் சமீபத்தில் வெளியானது. வெறும் மூன்றே நாளில் இந்த படம் 50 வயதிற்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. உப்பண்ணா படத்திலும் விஜய்சேதுபதியின் ராயணம் என்ற வில்லன் கதாபாத்திரம் மி ரட் டலாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து ஆந்திராவிலிருந்து தொடர்ந்து விஜய் சேதுபதியை வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதி வீட்டின் முன்பு தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இதனை பயன்படுத்தி விஜய் சேதுபதி தன்னுடைய சம்பளத்தை 10 மடங்காக உயர்த்தி விட்டதாக கூறுகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறாராம் விஜய் சேதுபதி.

கொஞ்சம் புகழ்ந்து பேசியதுமே சம்பளத்தை உயர்த்தி விட்டார் என அக்கட தேசத்து தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.

இதேபோல்தான் பிரகாஷ்ராஜ் தெலுங்கில் பிரபலமான பிறகு சம்பளத்தை பல மடங்காக உயர்த்தினாராம். காற்றுள்ள போதே தூ ற் றிக்கொள் என்ற பழமொழியை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் விஜய் சேதுபதி. இஷ்டமிருந்தால் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார்கள் நம்ம ஊரு பார்ட்டிகள்.