அதிக விலைக்கு போன சுல்தான்! கூடுதல் பணம் கொடுத்து வாங்கிய முக்கிய நிறுவனம்!

110

சுல்தான்…

நடிகர் கார்த்தியின் படங்கள் மீது எப்போதும் ஒரு கவனம் பலருக்கும் உண்டு. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்திக்கு பாண்டி ராஜ் இயக்கத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம், லோகேஷ் இயக்கத்தில் வந்த கைதி ஆகிய படங்கள் சிறப்பான அந்தஸ்தை பெற்றுத்தந்தன.

அவரின் மார்க்கெட்டும் கூடியது. சினிமாவை தாண்டி உழவன் என்ற அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதும், அவர்களுக்கு தேவையான சமுதாய நல உதவிகளை செய்வதையும் தொடர்ந்து வருகிறார்.

அவரின் நடிப்பில் சுல்தான் படம் உருவாகிவருகிறது. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.

தெலுங்கு சினிமாவின் பிரபலம் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஏப்ரல் 2 ல் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சுல்தான் படத்தை தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் வாராங்கல் ஸ்ரீனு ரூ 7.5 கோடிக்கு வாங்கியுள்ளாராம்.

தெலுங்கில் கைதி படம் எதிர்பார்த்தை விட அதிகமாக வசூல் செய்ததால் சுல்தான் படத்திற்கு நல்ல விலை கிடைத்துள்ளதாம்.