சென்னை சர்வதேச திரைப்பட விழா: ஐஸ்வர்யா ராஜேஷூக்கு விருது! என்ன விருது தெரியுமா?

351

ஐஸ்வர்யா…….

18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயின் ரோல் மட்டுமல்லாமல் தங்கை ரோலாக இருந்தாலும் கச்சிதமாக நடித்து பேரும் புகழும் பெறக்கூடியவர். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வானம் கொட்டட்டும், க/பெ.ரணசிங்கம், வேர்ல்டு பேமஸ் லவர் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது, பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களில் நடித்து வருகிறது.

இந்த நிலையில், 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் சென்னையில் 18ஆவது சர்வதேச திரைப்பட விழா நடந்துள்ளது. இதில், 53 நாடுகளிலிருந்து 91 படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டியில், சூரரைப் போற்று, காட்பாதர், காளிதாஸ், பொன்மகள் வந்தாள், லேபர், கல்தா, மழையில் நனைகிறேன்,

மை நேம் இஸ் ஆனந்தன், க/பெ ரணசிங்கம், கன்னி மாடம் ஆகிய 13 படங்கள் பங்கேற்றன.இதில், க/பெ ரணசிங்கம் பட த்தில் அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் சிறிய விபத்தில் உயிரிழந்த தைத் தொடர்ந்து அவரது உடலை தாய் நாட்டிற்கு கொண்டு வரும் போராடும் ஒரு ஏழை மனைவியின் வாழ்க்கையை மையப்படுத்தி க/பெ ரணசிங்கம் படம் வெளியாகியிருந்தது.

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஐஸ்வர்யா ராஜேஷூக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.