“ரொம்ப சுமார்” ! DOCTOR படத்தின் இரண்டாவது சிங்கிள் “Oh Baby” பாடல் உள்ளே !

108

டாக்டர்……..

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர் ‘ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

இப்படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் வினய் மற்றும் யோகி பாபு நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தது.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்திற்காக இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான “செல்லம்மா செல்லம்மா” பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான ” Oh Baby” என்னும் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

இதனை கேட்ட ரசிகர்கள் “ரொம்ப சுமாரா இருக்கு இதுக்கு இவ்வளவு சீனா?” என்று விமர்சனம் செய்து வருகிறார்கள் .