அழகான லுக்! கண்ணை பறித்த சாய் பல்லவி! பலரும் எதிர்பார்த்த போஸ்டர் இதோ!

79

சாய்பல்லவி…

ரவுடி பேபி பாடல் ஒலிக்கும் இடங்களில்லெல்லாம் நடிகை சாய்பல்லவியின் நினைவு ரசிகர்களுக்கு வந்து போகும் தானே. விசேஷ வீடுகளில் மேள வாத்தியம், பேண்ட் இசைக்குழுவினர் கூட இப்பாடலை தவறாமல் வாசிக்கிறார்கள்.

தமிழில் இப்பாடல் போல தெலுங்கிலும் நானி காரு பாடலுக்கு அவர் நடனம் மிகவும் ஃபேமஸ். தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன.

அடுத்ததாக நடிகர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்திலிருந்து #SarangaDariya என்ற பாடல் லிரிக் வீடியோ வரும் ஃபிப்ரவரி 28 ல் வெளியாகவுள்ளது.

சைதன்யாவின் மனைவி நடிகை சமந்தா இதனை வெளியிடுகிறார். இதில் சாய்பல்லவியின் நடனத்தை காண ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

இப்பாடலுக்கான போஸ்டரில் சாய் பல்லவியின் அழகான லுக் பலரையும் ஈர்த்துள்ளது.