விஜய் சேதுபதியுடன் ஒரே ஒரு படம்.. 5 வருடமாக வாய்ப்பு இல்லாமல் தடுமாறும் இளம் இயக்குனர்!!

107

விஜய் சேதுபதி…..

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தற்போது பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் வரவேற்பு மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கில் விஜய் சேதுபதி ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு திறமையான நடிகரான விஜய் சேதுபதியை வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு தோல்வி படத்தை கொடுத்த இளம் இயக்குநருக்கு தற்போது வரை பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி என்ற நடிகரை வித்தியாசமான கோணத்தில் காட்டி ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக மாற்றி விட்டவர் இயக்குனர் நலன் குமாரசாமி. சூது கவ்வும் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து கொரிய படத்தின் ரீமேக்காக காதலும் கடந்து போகும் என்ற படத்தில் இணைந்தனர்.

சூது கவ்வும் படத்தின் வெற்றியில் பாதி கூட காதலும் கடந்து போகும் படம் பெறவில்லை. இதனால் நலன் குமாரசாமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இடையில் விஜய் சேதுபதியிடம் ஒரு பட வாய்ப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் விஜய் சேதுபதி வேலைக்கு ஆகாது என ஐந்து வருடம் கழித்து பிரபல நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளாராம் நலன் குமாரசாமி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே நலன் குமாரசாமி சினிமாவில் நிலைக்க முடியும் என்பதால் திரைக்கதையை கவனத்துடன் எழுதி வருகிறாராம்.