140 கோடியில் பிரமாண்டமாக உருவாகும் தல அஜித்தின் புதிய வீடு.. எல்லாம் போனிகபூர் அங்கிள் புண்ணியம்தான்!!

126

தல அஜித்…..

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தல அஜித். சமீபகாலமாக தல அஜித் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது.

மாஸ் படங்கள் மட்டுமில்லாமல் அஜித் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களும் பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை சொல்லலாம்.

அந்த வகையில் அடுத்ததாக தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் வலிமை படத்திற்கு தல அஜித் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதனைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

அதற்காக 70 கோடி வரை சம்பளம் பேசி உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. படம் வெளியாவதற்கு முன்னரே ஒரு தயாரிப்பாளர் அஜித்தை நம்பி 20 கோடி அதிகமாக சம்பளம் கொடுப்பது அனைவருக்குமே அதிர்ச்சி தான். கேட்டால் எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்கிறாராம்.

அஜித்துக்கு மட்டுமல்லாமல் மற்ற முன்னணி நடிகர்கள் 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்குகிறார்களே அதை என்ன செய்வார்கள் என்ற யோசனை எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். அந்த வகையில் தல அஜீத் சமீபத்தில் வாங்கிய சம்பளத்தை கொண்டு 140 கோடியில் ஒரு பிரம்மாண்ட வீட்டை உருவாக்கி வருகிறாராம்.

ஏகப்பட்ட நவீன அம்சங்கள் கொண்டு உருவாகும் இந்த வீட்டின் வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம். இணையத்தில் தல அஜித்தின் புதிய வீட்டின் டிசைன் கொண்ட புகைப்படங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.