பெரும் வசூல்! உலகளவில் டிரெண்டிங்! ஸ்பைடர் மேன் 3 நிகழ்த்திய சாதனை! ரிலீஸ் தேதி இதோ!

68

ஸ்பைடர் மேன் 3…

ஹாலிவுட் படங்களை அதிகம் விரும்பும் ரசிகர்கள் இந்திய சினிமாவிலும் இருக்கிறார்கள். வெளிநாட்டு படங்களுக்கு மிகுந்த முக்கியத்துவமும் வரவேற்பும் உலகளவில் தொடர்ந்து கிடைத்து வருகிறது.

அதிலும் ஸ்பைடர் மேன் படங்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அடுத்ததாக ஸ்பைடர்மேன் 3 படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.

ஸ்பைடர் மேன் படத்தின் இரண்டாம் பாகமான Spiderman far from home கடந்த 2019 ல் வெளிவந்து உலகம் முழுக்க பெரும் வசூல் சாதனையை செய்தது.

இதன் மூன்றாம் பாகத்திலும் 2 ம் பாகத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமி ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு புகைப்படங்களை நடிகர்கள் நடிகைகள் வெளியிட்ட நிலையில் ஸ்பைடர் மேன் ஹோம் ரெக்கர், ஸ்பைடர்மேன் ஹோம் ஸ்லைஸ், ஸ்பைடர் மேன் போன் ஹோம் என படத்திற்கு மூன்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் ஸ்பைடர் மேன் 3 என உலகளவில் ஹேஷ் டேக் டிரெண்ட் ஆனது. ஆனால் படத்தின் 3ம் பாகத்திற்கு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என பெய்ர வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனராம்.