பூஜா ஹேக்டே…

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி 65 படத்தின் மேல் பெரிதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

ஆம் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து கதாநாயகியாக யார் நடிக்க போகிறார் என்று கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

இதில் பூஜா ஹேக்டே, ரஷ்மிகா மந்தனா என இருவரின் பெயர்கள் பெரிதும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை பூஜா ஹேக்டே முதல் முறையாக தளபதி 65 படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

இதில் ” அந்த படத்தில் நான் நடித்தால் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கும். நான் எனது திரையுலக பயணத்தை தமிழில் இருந்து தான் ஆரம்பித்தேன். இந்த விஷயம் நடக்கும் என நான் நம்புகிறேன் என்று ” நடிகை பூஜா ஹேக்டே கூறியுள்ளாராம்.


