ஜரீன் கான்
பிரபல திரைப்பட நடிகையின் வயிற்றில் ஏதோ கோடு, கோடாக இருக்கிறதே என்று கிண்டல் செய்த நபர்களுக்கு அவர் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் போன்றே இருக்கிறார் என்று பலராலும் கூறப்பட்டவர் தான் நடிகை ஜரீன் கான். இவர் சல்மான் கானின் வீர் திரைப்படம் மூலம் அறிமுகமாகினார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது வயிறு தெரியும்படி புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்திருந்தார். அதைக் கண்ட இணையவாசிகள், அது என்ன உங்களின் வயிற்றில் கோடு, கோடாக உள்ளது. வயிறை பார்த்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது.
இப்படி ஒரு வயிறை வைத்துக் கொண்டு அது தெரியுமம்படி புகைப்படம் வெளியிடலாமா? பாலிவுட் நடிகையாக இருக்கும் உங்களுக்கு இப்படி ஒரு மோசமான வயிறா என்று மோசமாக விமர்சித்தனர்.
சிலரோ ஜரீன் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது. வயிற்றுக்கு மேக்கப் போட்டு அழகாக காட்டாமல் உள்ளதை உள்ளபடி பெருமையாக காட்டியுள்ளீர்கள் என்றும் பாராட்டினர்.
நெட்டிசன்கள் தன்னை விளாசியதை பார்த்த ஜரீன் கான் கூறியதாவது, என் வயிறு ஏன் அப்படி இருக்கிறது என்று வியப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
50 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைத்த ஒருவரின் வயிறு இப்படித் தான் இருக்கும். போட்டோஷாப் செய்யவில்லை என்றால் வயிறு இப்படி தான் தெரியும்.
எப்போதும் உண்மையாக இருக்க விரும்புபவள் நான். அதனால் என் வயிறை நினைத்து நான் வெட்கப்படவில்லை. எனவே, என்னை கிண்டல் செய்வது தேவையில்லாதது என்று தெரிவித்துள்ளார்.