‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் குட்டி ஐஸ்சுவா இது.? நம்பவே முடியல, மாடர்ன் உடையில் மஜாவான போஸ்!

106

ஸ்ரேயா சர்மா…….

கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘ஜில்லுனு ஒரு காதல்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரேயா சர்மா.

அந்தப் படத்தில் உள்ள பாடல்களை இன்று வரை நம்மால் எப்படி மறக்க முடியாதோ, அதேபோல்தான் அந்தப்படத்தின் ஐஸ்வர்யா ரோலையும் மறக்க முடியாது. ஏனெனில் அந்த அளவிற்கு செம க்யூட்டான ரியாக்சன்களை அள்ளித் தெளித்து இருப்பார் ஸ்ரேயா.

மேலும் ஸ்ரேயா சிறுவயதிலிருந்தே பெரிய ஹீரோயினாக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்ததால், முட்டி மோதி விடாமுயற்சியுடன் தெலுங்கில் ‘காயகுடு’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதால் ஸ்ரேயா மேலும் சில வாய்ப்புகளை டோலிவுட்டில் பெற்றார்.

அதை தொடர்ந்து ஸ்ரேயா நாகார்ஜுனாவின் தயாரிப்பில் ‘நிர்மலா கான்வென்ட்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட்டின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இதனால் தற்போதும் ஸ்ரேயா சர்மாவிற்கு தெலுங்கில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

இருப்பினும் படவாய்ப்புகள் குறைந்து இருப்பதால் ஸ்ரேயா சர்மா, அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஸ்ரேயா சர்மா தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிறங்கி தவிக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டு இருக்கும்புகைப்படத்தில் செம கிளாமராக காட்சியளிக்கிறார். இதைப் பார்க்கும் ரசிகர்கள், ‘தேனில் முக்கிய எடுத்த ஆப்பிள் போலவே இருக்கிறீர்களே!’ என்று வர்ணித்து வருகின்றனர்.