அவ்வை சண்முகி படத்தில் நடிக்க முடியாமல் போன சிவாஜி.. கே எஸ் ரவிக்குமார் வெளியிட்ட உண்மை!!

78

அவ்வை சண்முகி……..

ஜெமினி கணேசன் ஆரம்ப காலத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டாலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி.

இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பு பேசப்பட்ட அளவிற்கு ஜெமினி கணேசனின் கதாபாத்திரமும் பேசும் அளவிற்கு கேஎஸ் ரவிக்குமார் செதுக்கி வைத்திருந்தார். அந்த அளவிற்கு அருமையான கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசனை நடிக்க வைத்து மிகப்பெரிய வரவேற்பை வாங்கிக் கொடுத்தார்.

அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் அவ்வை சண்முகி கெட்டப்பை பார்த்து ஜெமினி கணேசன் அவ்வை சண்முகியை காதலிப்பதாக செய்யும் சேட்டைகள் அனைத்துமே இன்றும் ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் கேஎஸ் ரவிக்குமார் பிரபல நடிகரான சிவாஜி தேர்ந்தெடுத்துள்ளார். பின்பு படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் போது சிவாஜிக்கு எதிர்பாராதவிதமாக உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.

பின்பு சிவாஜியின் இரண்டு மகன்களும் இப்போதைக்கு படத்தில் நடிக்க வேண்டாம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதையடுத்து. சிவாஜியின் நெருங்கிய நண்பரான ஜெமினி கணேசனுக்கு தனக்கு கொடுத்த வாய்ப்பை அவருக்கு கொடுக்குமாறு கேஸ் ரவிக்குமாரிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பத்து நடிகைகள் இருந்தால் கூட ஜெமினி கணேசன் அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடிப்பார். அதனால் அவரை வைத்து எடுத்துக் கொள்ளுங்களேன் என கூறியதாக கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.