சிம்புவும் தனுஷும் மோதிக்கொள்ள காரணம் இதுதான்.. ஏமாறுவது என்னமோ ரசிகர்கள் தான்!

82

சிம்பு மற்றும் தனுஷ்…

தமிழ் சினிமாவில் அந்தக் காலத்திலிருந்தே குறிப்பிட்ட இரண்டு நடிகர்களுக்குள் எப்போதும் போட்டிகளில் இருந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித் ஆகியோரைச் சொல்லலாம். அந்த வகையில் தற்போது அதிக ரசிகர்களை கொண்டவர்களாக இருப்பவர்கள் சிம்பு மற்றும் தனுஷ்.

சிம்பு ஒரு கட்டத்தில் தனுஷை விட முன்னிலையில் இருந்தார். ஆனால் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தனக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த பெரிய இடத்தை இழந்தார்.

சிம்புவிட்ட அந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்ட தனுஷ் அடுத்தடுத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது சிம்புவை விட பல மடங்கு வியாபாரத்தில் உயர்ந்து நிற்கிறார். இதுவே இருவருக்கும் போட்டிகளை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே தங்களது படங்களில் இருவரையும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் சிம்பு ஈஸ்வரன் படத்தில் அசுரன் படத்தில் நடித்த தனுஷை வம்புக்கு இழுத்தார்.

ஆனால் அதற்கு முன்பே பட்டாசு படத்தில் தனுஷ், அப்பா பெயரை பின்னாடி பயன்படுத்துவது பெரிதல்ல, அப்பா பெயரை காப்பாற்றுமாறு நடந்து கொள்ளவேண்டும் என வசனம் பேசியிருப்பார்.

சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் டீசரில் கூட சரிடா மூடிட்டு போடா என்ற வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக இரு ரசிகர்களும் அடித்துக் கொண்டனர். ஆனால் உண்மையில் இது எல்லாமே ஒரு வியாபார தந்திரம். இருவரது ரசிகர்களையும் உசுப்பேற்றி ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் போதும் அதைப் பயன்படுத்தி நன்றாக கல்லா கட்ட போடப்பட்ட பிளான் தான் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இது தெரியாமல் இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் ரசிகர்கள் அடித்துக் கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. சிம்பு மற்றும் தனுஷ் இருவருமே நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.