இரண்டாவது காதலனுடன் சுற்றி திரியும் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் ரொமான்டிக் செல்பி!

86

ஸ்ருதிஹாசன்…

கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன்னிடம் ரசிகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகின்றன.

ஏற்கனவே ஸ்ருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலே என்பவரை காதலித்து அதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு கருத்து வேறுபாட்டினால் பிரிந்துவிட்டனர்.

அதன்பின்பு ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு ஸ்ருதிஹாசன் டெல்லியை சேர்ந்த டூடுல் கலைஞன் சாந்தனு என்பவரை சில நாட்களாக காதலித்து வருகிறார். இதைப் பற்றி அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் தன்னுடைய காதலனுடன் சென்னை திரும்பிய உள்ள நிலையில், அவர்கள் இருவரும் ஷாப்பிங் செய்யும் புகைப்படமானது சோசியல் மீடியாவில் வைரலாகப் பரவி வருகிறது.

ஏனென்றால் ஸ்ருதிஹாசனும் சாந்தனுவும் பொது இடத்தில் ரொமான்டிக் போஸ் கொடுக்கும் புகைப்படமும், அத்துடன் ஸ்ருதிஹாசனின் நெருங்கிய தோழியான டிசைனர் அமிர்தாவும் உடனிருக்கும் புகைப்படமும் தற்போது ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது.

மேலும் ஸ்ருதிஹாசன் இந்த புகைப்படத்தை குறிப்பிட்டு அத்துடன் காதலனுடன் முதல் முதலாக நேற்று சென்னை வந்துள்ளேன் என்பதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.