வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடி.. வேற லெவல் என புகழ்ந்து தள்ளிய தல அஜித்..!

93

வலிமை…

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் இருந்து, ரசிகர்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒரே திரைப்படம் தல அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் வலிமை தான்.

இப்படத்தின் First லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று தான், தற்போது வரை தல அஜித்தின் ரசிகர்கள் பல இடங்களில் வலிமை அப்டேட் வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லட்ச கணக்கில் காத்துகொண்டு இருக்கும் தல அஜித்தின் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி விரைவில் காத்துகொண்டு இருக்கிறது.

ஆம் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் ரெடி ஆகிவிட்டதாம். இந்த மோஷன் போஸ்டரை தல அஜித் பார்த்துவிட்டு சூப்பராக இருக்கிறது என்று கூறியுள்ளாராம்.

மேலும் தல அஜித் இதனை எப்போது வெளியிட வேண்டும் என்று நான் கூறும் வரை பொறுத்திருங்கள் என்று படக்குழுவிடம் தெரிவித்துள்ளாராம். இதனால் தல அஜித்தின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் விருந்து காத்துகொண்டு இருக்கிறது குறிப்பிடத்தக்கது.