நயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்!!

90

நடிகை நயன்தாரா……

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை கடந்த 4 வருடங்களுக்கு மேல் காதலித்து வருகிறார். ஆனால் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை.

தன்னுடைய வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை பார்த்தவர் நயன்தாரா. நயன்தாராவின் முதல் காதலர் சிம்பு, இரண்டாவது காதலர் பிரபுதேவா, மேலும் சில நடிகர்களுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தி என நயன்தாரா வாழ்க்கை காதல் விஷயத்தில் மட்டும் படு டேமேஜ் ஆகியது.

ஒரு கட்டத்தில் காதலும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாமென ஒதுங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். அப்போது தான் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி காதலாக மாறியது. அன்று முதல் இன்று வரை காதலர்களாக கோலிவுட் வட்டாரங்களில் கைகோர்த்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் முதல் மற்றும் முன்னாள் காதலர் சிம்பு விக்னேஷ் சிவனுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் நயன்தாரா நல்ல பொண்ணு, சீக்கிரம் நயன்தாராவை திருமணம் செய்துகொள் என கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை படித்த ரசிகர்கள், இன்னமும் நயன்தாராவை மறக்க முடியாமல் சிம்பு தவிர்த்து வருகிறார் என்பது போல கிளம்பி விட ஆரம்பித்து விட்டனர். விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிப்பதற்கு முன்னரே சிம்புவின் போடா போடி படத்தை இயக்கினார். அப்போதிலிருந்தே சிம்பு மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நண்பர்களாக மாறினர்.

சமீபத்தில்கூட காதலர் தினத்தன்று சிம்பு நாயுடன் தனக்கு திருமணம் ஆகவில்லை என புலம்பிய வீடியோ செம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த நாயை நயன்தாராவாக நினைத்து புலம்பியதாகவும் சிலர் கிளப்பி விட்டனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.