ஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்!!

74

ரம்யா….

இன்னைக்கு ஹாட் ட்ரெண்டிங் என்றாலே இந்த பிரபலம் தான். ஜெயலலிதாவுடன் இந்த பிரபலம் எடுத்த சிறுவயது புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. ஆனால் அவர் யார் என்பதைப்பற்றி பார்ப்போம்.

தொகுப்பாளர்களைப் பொருத்தவரை ஒரு சிலர் மட்டுமே பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் கண்டிப்பாக விஜே ரம்யாவிற்கும் ஒரு இடமுண்டு.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ரம்யா. ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் இவர் ஒரு சிறு காட்சி மட்டுமே நடித்து விட்டு சென்று இருப்பார். அதிலும் குறிப்பாக “ஜேடி ஸ்டுடென்ட் இல்லமா ப்ரொஃபஸர் “ என கூறும் விஜே ரம்யாவின் குரல் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

ரம்யா அவரது சமூக வலைதள பக்கத்தில் ஜெயலலிதாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பதிவில் தான் சிறுவயதில் இருக்கும்போது தனது தந்தை தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.

அப்போது ஜெயலலிதாவை பார்க்கும்போது தங்களையும் அழைத்து சென்றதாக குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜெயலலிதா அவர்கள் விஜே ரம்யாவை மடியில் உட்காரவைத்து காபி கொடுத்ததாகவும் அந்த பதிவில் பதிவிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் விஜே ரம்யா.