மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை வெளுத்து வாங்கிய சமுத்திரகனி.. உங்களையெல்லாம் திருத்த முடியாது!

75

சமுத்திரக்கனி…

அனுதினமும் நடக்கும் நிகழ்வுகளை மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது விமர்சனம் மூலம் மீமில் இருப்பவர்களை தூக்கி பேசுவார்கள் அல்லது சங்கடப் படுத்தவும் செய்வார்கள். அந்த வகையில் தற்போது சிக்கிக் கொண்டவர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி.

ஏனென்றால் நாவலைத் தழுவி, நெசவுத் தொழிலை மையப்படுத்தி, வெற்றிமாறன் இயக்கிய சமுத்திரக்கனி நடித்த ‘சங்கத்தலைவன்’ படம் சென்ற வாரம் ரிலீஸானது. பொதுவாக சமுத்திரக்கனியின் படங்கள் எல்லாம் நீண்ட வசனங்கள் உடன் கூடிய கருத்துக்கள் பொதிந்த பிரச்சார படமாகவே இருக்கும்.

ஆகையால் இதைக் குறிவைத்து மீம்ஸ் நாயகர்கள் சமுத்திரக்கனிக்கு எதிராக எக்கச்சக்கமான மீம்ஸ்களை உருவாக்கி, அதை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சமுத்திரக்கனி பேட்டி ஒன்றின் மூலம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

அதில் சமுத்திரக்கனி, ‘படங்களில் கருத்து கூறுவது அட்வைஸ் கிடையாது. ஒரு அக்கறைதான் நடிக்கிறேன் என்பது அர்த்தம். எங்கேயும் ஒருத்தன் நான் கூறும் கருத்துக்களை முனைப்புடன் ஏற்கத் தயாராக இருப்பவனுக்கு கூறுகிறேன் என்று நினைத்துக் கொள்கிறேன்.

மீம்ஸ் போடுரவனுக்கு நான் சொல்லலை. என்னுடைய கருத்துக்களை ஏற்க வேண்டாம். நான் என்னை நேசிக்கின்ற ரசிகர்களுக்காக கருத்து சொல்லிக் கொண்டே இருப்பேன். இப்படி போன்ற படங்களை எல்லாம் எடுத்து நான் கோடிகோடியாக சம்பாதிக்க நினைக்கவில்லை.

இதனால் எனக்கு நஷ்டம் தான், ஆனால் அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இவ்வளவு எல்லாம் எனக்கு கொடுத்த சமூகத்திற்கு நான் ஓடி ஓடி சம்பாதித்து நல்ல படைப்பை கொடுத்திருக்கிறேன்’ என்ற மனத் திருப்தி கிடைக்கும். என்றாவது ஒரு நாள் திருந்துவாய் மாறுவாய் என்ற நம்பிக்கையில் அன்று வரை காத்திருக்கிறேன்’ என்று அந்தப் பேட்டியில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை வறுத்து எடுத்துள்ளார் சமுத்திரக்கனி.