கேஜிஎப் 2 பிறமொழி டப்பிங்…. அதிரடி முடிவை எடுத்த படக்குழு..!

80

கேஜிஎப் 2…

கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகள் எல்லாவற்றையும் பெங்களூரில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளன,. வழக்கமாக டப்பிங் பணிகள் அந்தந்த மாநிலங்களில்தான் நடக்கும். ஆனால் இந்த முறை எல்லா டப்பிங் பணிகளையும் பெங்களூரிலேயே நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏனென்றால் படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம்.