திருமணம் பற்றி கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர்- நடிகை வரலட்சுமி ரியாக்ஷன் என்ன தெரியுமா, பரபரப்பு தகவல்..!

71

வரலட்சுமி…..

நடிகைகள் சினிமாவில் சாதித்துவிட்டால் அடுத்தகட்டமாக பத்திரிக்கையாளர்கள் கேட்பது திருமணம் எப்போது என்பது தான்.

சிலர் கூலாக பதில் கூறுவார்கள், நடக்கும் போது கண்டிப்பாக அறிவிக்கிறேன் என்பார்கள்.

அண்மையில் நடிகை வரலட்சுமி தனது அம்மாவுடன் ஒரு மருத்துவமனை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் திருமணம் பற்றி கேட்க அதற்கு மிகவும் கோபமடைந்துள்ளார்.

அதோடு அவர், ஒரு பெண்ணை பார்த்து கேட்கும் கேவலமான கேள்வி, யாரும் இனி அப்படி செய்யாதீர்கள். ஆண், பெண் இருவருக்கும் சில கனவுகள் இருக்கும், திருமணம் மட்டுமே என்பது இல்லை என கூறியுள்ளார். அவர் அப்படி பேசியதும் கொஞ்சம் அந்த நிகழ்ச்சி பரபரப்பாகியுள்ளது.