சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு சீன் போடும் விஜய் டிவி VJ.. இனி நடிச்சா ஷங்கர், முருகதாஸ் படம் தானாம்!

87

பிரபல விஜே…..

சிவகார்த்திகேயனுக்கு பிறகு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் அடுத்த சிவகார்த்திகேயன் என பெயரெடுத்து சினிமாவில் நுழைந்தவர் தான் அந்த பிரபல விஜே.

இசை சேனலில் பணியாற்றியவர் அதன் பிறகு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குபவராக களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து அதே சேனலில் எவர்கிரீன் சீரியல் ஒன்றில் நடித்தார்.

ஆரம்பம் என்பதால் அடக்க ஒடுக்கமாக இருந்த அந்த விஜே சமீபத்தில் அதே சேனலில் நடத்திய பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மக்கள் பேராதரவு எனக்கு கிடைக்கும், நான்தான் டைட்டில் வின்னர் ஆவேன் என பல கனவுகளுடன் உள்ளே நுழைந்தார். ஆனால் அங்கு நடந்த ஆட்டமே வேறு.

யாரும் எதிர்பார்க்காத வகையில் வேறு ஒரு நடிகர் பெரிய முதலாளி பட்டத்தை வாங்கி சென்று விட்டார். இந்த நடிகருக்கு கிடைத்தது என்னமோ மூன்றாவது இடம்தான். அப்போது பார்க்கணுமே, இவரது முகத்தில் ஈ ஆடவில்லை. பொறாமையும் வயிற்றெரிச்சலும் முகத்தில் அப்படியே அப்பட்டமாக தெரிந்தது.

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தன்னுடைய மார்க்கெட் இரண்டு மடங்காக உயர்ந்து விட்டது என தன்னை சார்ந்தவர்களிடம் பந்தா காட்டி கொள்கிறாராம்.

ஏற்கனவே யூடியூப் நண்பர்கள் சேர்ந்து உருவாக்கிய படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் பெரிய அளவு வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள மற்றொரு படம் தற்போது வரை ரிலீசாகாமல் தடுமாறி வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக அந்த விஜே வீட்டை நோக்கி சில புதிய தயாரிப்பாளர்களும் புதிய இயக்குனர்களும் கதையுடன் சென்றுள்ளனர். ஆனால் பெரிய முதலாளி நிகழ்ச்சிக்கு பிறகு தன்னுடைய மார்க்கெட் முன்னணி நடிகர்கள் ரேஞ்சுக்கு உயர்ந்து விட்டதாகவும், இனி நடித்தால் முருகதாஸ், ஷங்கர் போன்ற பெரிய பிரபலமான இயக்குனர்களுடன் மட்டும்தான் என இளம் இயக்குநர்களை ஒதுக்கி வைக்கிறாராம். இதை அறிந்த தயாரிப்பாளர்கள், ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என வச்சி செய்ய ரெடியாக காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.