பல்டி அடித்து அசத்தும் சாய் தன்ஷிகா… வைரலாகும் வீடியோ..!

72

சாய் தன்ஷிகா…

மகளிர் தினத்தை முன்னிட்டு சாய் தன்ஷிகா நடித்து வரும் யோகி டா படத்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார்.

சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன.

தற்போது இப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதில் தன்ஷிகா பல்டி அடிப்பது போன்ற ஒரு ஆக்‌ஷன் காட்சியை சிறப்பாக செய்துள்ளார்.

பெண்களால் எதையும் சாதிக்க இயலும் என்பதை வலுயுறுத்தவே பெண்கள் தினமான நேற்று இக்காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.