மகன்..மகள் எப்படி பட்டவர்கள்..? இளைய தளபதி விஜய் சொன்ன பதில்.. அரிதான வீடியோ..!

35

இளைய தளபதி விஜய்…

இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத வீடுகளே இல்லை என சொல்லலாம். இயக்குனர் சந்திரசேகரின் மகன் என அடையாளத்தில் இருந்த விஜய் இப்போது, எஸ்.ஏ.சந்திரசேகருக்கே விஜயின் அப்பா என்னும் அடையாளத்தைக் கொடுத்திருக்கிறார்.

இளையதளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் கரோனாவுக்குப் பின்பு வெளியாகி வசூலை வாரிக் குவித்தது. ஓடிடியிலும் ரிலீஸானது. இளையதளபதி விஜய் தன் ரசிகை சங்கீதாவை திருமணம் செய்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் புது ஜோடி போலவே ரொமாண்டிக்காக வாழ்ந்து வருகின்றனர்.

நடிகர் விஜய்க்கு சஞ்சய் என்னும் மகனும், திவ்யா ஷாஷா என மகளும் உள்ளனர். இவர்கள் இருவருமே தளபதியின் படங்களில் தலைகாட்டி இருக்கிறார்கள்.

இதில் சஞ்சய் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலிலும், திவ்யா ஷாஷா தெறி பட கிளைமேக்ஸ் காட்சியிலும் நடித்திருப்பார். அடிப்படையில் பேட்மிட்டன் வீராங்கணையான தளபதியின் மகள் திவ்யா ஷாஷா வெளிநாட்டில் படித்துவருகிறார். இப்போது இவர்களைப் பற்றி அதிகம் தெரிந்தாலும் முன்பெல்லாம் விஜய் வாரிசுகள் யாரும் வெளி உலகில் மீடியா வெளிச்சம் படாமலேயே வாழ்ந்தனர்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய் ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். அப்போது ஒரு மாணவி விஜயிடம். ‘உங்கள் குழந்தைகள் சஞ்சய், திவ்யாவை வெளியில் காட்டுவதில்லையே ஏன்? அவர்கள் இருவரின் கேரக்டர் எப்படி எனக் கேட்டார்.

அதற்கு தளபதி விஜய், ‘அவுங்களுக்கு என் குழந்தைங்கன்னு எந்த முக்கியத்துவமும் கிடைக்கக் கூடாது. ஸ்கூலில் சுதந்திரமா இருக்கட்டும்ன்னு தான் வெளியில் தலைகாட்டுறதில்லை. சஞ்சய் அடிக்கடி மாறிட்டே இருப்பர். திடீர்ன்னு என் பேன்னு சொல்லுவாரு. திவ்யாவைப் பொறுத்தவரை எல்லா வீட்டிலும் செகண்ட் பேபி நார்ட்டி கேர்ளாகத்தான் இருப்பார்கள். அப்படித்தான் திவ்யாவும் நார்ட்டி கேரள்தான்.’’என்றார்.