மீண்டும் விக்ரமுடன் இணையும் பிரபல நடிகை… யார் தெரியுமா?

63

பிரபல நடிகை…

‘பொன்னியின் செல்வன்’, ‘கோப்ரா’ ஆகிய படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்துக்கு விக்ரம் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை தற்போதைக்கு ‘சீயான் 60’ என அழைத்து வருகிறார்கள். ‘கோப்ரா’ படத்தினைத் தயாரித்த லலித் குமாரே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார்.

விக்ரமுடன் முதன்முறையாக அவருடைய மகன் துருவ் விக்ரமும் இந்தப் படத்தில் இணைந்து நடிக்கிறார்.

படத்தின் இருநாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஏற்கனவே ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில்,

நீண்ட தேடலுக்குப் பிறகு தற்போது சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

முன்னதாக ‘பிதாமகன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் விக்ரமுடன் நடனமாடியிருந்தார் சிம்ரன்.

அத்துடன் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.