பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட அனுஷ்கா.. எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன் என புலம்பல்..!

111

அனுஷ்கா….

ஒரு காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா சமீபகாலமாக விரக்தியின் உச்சிக்கே சென்று விட்டதாக தகவல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. சமீபகாலமாக வரும் சோ.த.னை.களால் போதுமடா சாமி என கும்பிடு போடுகிறாராம்.

ஆறடி உயரத்தில் அழகான ஒரு பெண் அரைகுறை ஆடையில் சினிமாவில் வந்தால் யாருக்கு தான் பிடிக்காது. அப்படி வந்த உடனேயே ரசிகர்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்தவர் தான் அனுஷ்கா. இவரைப் பார்த்து ஜொள்ளு விடாத ஹீரோக்களே கிடையாது.

அனுஷ்காவை ஒரு படத்திலாவது ஜோடி போட்டு விட வேண்டும் என பல முன்னணி நடிகர்கள் ஏங்கியுள்ளனர். அதற்கு தகுந்தார்போல் தெலுங்கு சினிமாவில் பட வாய்ப்புகளை வாரி வாரிக் கொடுத்து வந்தனர். தமிழிலும் அதே கதைதான்.

ஆனால் ஒரு படத்திற்காக உடல் எடையை ஏற்றிவிட்டு பின்னர் குறைக்க முடியாமல் தடுமாறிய அனுஷ்காவுக்கு சமீப காலமாக எதிர்பார்த்த அளவு படவாய்ப்புகள் வரவில்லை. முன்னணி நடிகர்களும் சுத்தமாக அனுஷ்காவை ஒதுக்கி விட்டார்களாம்.

 

இதன் காரணமாக சினிமாவை விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம் என மாப்பிள்ளை தேடியதும் கைகூடவில்லை. இதனால் விரக்தியில் இருக்கும் அனுஷ்காவுக்கு தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன.

ஆனால் அதில் ஒரு சிக்கல். ஆரம்பத்திலிருந்தே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட பிரபல நடிகையாக வலம் வந்த அனுஷ்காவுக்கு தற்போது புதுமுக நடிகர்களின் படங்களிலேயே வாய்ப்பு கிடைத்து வருகிறதாம்.

ஒரு காலத்தில் எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் என தன்னுடைய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம். படமே இல்லை என்றாலும் பரவாயில்லை புதுமுக நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என கறார் காட்டுகிறாராம் அனுஷ்கா.