50 ஆண்டுகளுக்கு முன் இயேசுவாக நடிகர் கமல்ஹாசன்.. வைரலாகும் புகைப்படம்..!

91

நடிகர் கமல்….

தமிழ் சினிமா உள்ளிட்ட 60 ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில் பெரும் லிஜெண்ட்டரி நடிகராகவும் உலக நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். ஆரம்பகாலத்தில் இவரை பற்றி புகழ்ந்தாலும் சில கிசுகிசு வதந்திகளில் சிக்கியும் வந்தார்.

சில படங்களில் இவர் நடித்திருப்பது பலருக்கும் தெரியாமலே இருந்து பின் கண்டுபிடிக்கப்பட்டது. வெற்றி தோல்வி படங்களில் நடித்திருந்தாலும் அவரின் நடிப்பு பற்றி பலர் பேசப்பட்டு பாராட்டையும் பெற்றவர்.

அந்தவகையில், 1971 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், சிவகுமார் மற்றும் ஜெயலலிதா போன்ற ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வெளிவந்த அன்னை வேளாங்கண்ணி எனும் படத்தில் கமல் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த படத்தில் கமல்ஹாசன் ஜீசஸ் வேடத்தில் நடித்திருப்பார், இது பலருக்கும் தெரியாத ஒரு கதாபாத்திரம் தான். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் சிறுவயதில் நடித்த பிறகு பல படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறாராம்.