அகில இந்திய சாதனை பட்டியலில் இடம்பெற்ற ‘குக் வித் கோமாளி’ பவித்ரா! எப்படி தெரியுமா ?

102

பவித்ரா…..

அகில இந்திய அளவில் வரையப்பட்ட மிகப் பெரிய சுவர் ஓவியங்களில் ’குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குகொண்ட பவித்ராவின் ஓவியமும் இடம்பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், ஸ்டார் இந்தியா பவுண்டேஷன் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை இணைந்து எயிட்ஸ் விழிப்புணர்வு குறித்த சுவர் ஓவியத்தை வரையும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்

அந்த வகையில் சென்னை லட்சுமி நகர் என்ற பகுதியில் வரையப்பட்ட ஓவியங்களில் பல்வேறு பிரபலங்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில் இடம் பெற்றிருக்கும் ஒரு புகைப்படம் தான் ’குக் வித் கோமாளி பவித்ரா

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பவித்ரா இது குறித்து தான் பெருமைப்படுவதாகவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அகில இந்திய அளவில் மிகப் பெரிய சுவர் ஓவியமாக கருதப்படும் இந்த சாதனை பட்டியலில் ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு கொண்ட ஒருவரின் படமும் இருந்தது பெருமைக்குரியது என்றும் கூறப்பட்டு வருகிறது.