சிவராத்திரி நாளில் ஆண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை !!

77

ஹரிஜா..

பிரபல யூடியூப் சேனலான எருமை சாணி மூலம் புகழ் பெற்றவர் ஹரிஜா. அச்சேனலில் வரும் முன்னணி நடிகர் விஜய்யுடன் இணைந்து இவர் நடிக்கும் ஒவ்வொரு குறும்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்த அடையாளத்தின் மூலம் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “மிஸ்டர் லோக்கல்” திரைப்படம் மற்றும் நடிகர் அதர்வா நடித்த “100”, “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இந்நிலையில் தன்னுடன் ஒரு சில குறும்படங்களில் நடித்த கல்லூரிகால நண்பர் அமர் என்பவரை ஹரிஜா காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் எருமை சாணி சேனலின் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை “என்னன்ணு கெஸ் பண்ணுங்க பார்க்கலாம்” என்ற கேப்ஷனிட்டு வளைகாப்பு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இந்தப் புகைப்படம் பதிவிட்ட சில மணிநேரத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்று இருந்தது.

தற்போது அவர் மகா சிவராத்திரி நாளில் ஒரு ஆண் குழந்தைக்கு தயாகி இருப்பதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த மகாசிவராத்திரி நாளில் மிகவும் விரும்பப்பட்ட ஒன்றை தெரிவிக்கிறோம்.

எங்கள் வாழ்வின் புது திருப்பம். சிவன் மற்றும் பார்வதியின் சாராம்சம் போல அமர்-ஹரிஜா அன்பின் வடிவம். குட்டி இளவரசருக்கு ஒரு சிறப்பான வணக்கம்” எனப் பதிவிட்டு உள்ளார். ஹரிஜாவின் இந்தப் பதிவை அடுத்து பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.