கமல் தோளைத் தொட்டு சல்லி தனமான கேள்வி கேட்ட மைக் செட் ஸ்ரீராம்.. கடுப்பாகி ரசிகர்கள்!!

75

மைக் செட் ஸ்ரீராம்…

சமீபகாலமாக யூடியூப் பிரபலங்களுக்கு தாங்கள் தான் இந்த உலகத்திலேயே பிரபலமானவர்கள் என்ற முற்போக்கு சிந்தனை வந்து விட்டதா என்பது தெரியவில்லை. ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என மைக் செட் ஸ்ரீராம் மீது கடும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

யூடியூபில் சமீபகாலமாக வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதனால் ஒரு சில இளைஞர்கள் தங்களது நட்பு வட்டாரங்களை வைத்துக்கொண்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் சில சேனல்கள் பிரபலமாக இருந்து வருகின்றன.

அந்த வகையில் பிளாக் ஷீப், எரும சாணி, மைக் செட், சோதனைகள், பரிதாபங்கள் போன்றவை தமிழில் பிரபலமான யூடியூப் சேனல்களாக வலம் வருகின்றன. இதில் மற்ற சேனல்களை காட்டிலும் மைக் செட் ஸ்ரீராம் வெளியிடும் வீடியோக்களுக்கு அதிக அளவு வரவேற்பும் பார்வையாளர்களும் கிடைத்து வருகின்றன.

இந்தநிலையில் பிளாக் ஷீப் யூடியூப் சேனல் கடந்த சில வருடங்களாக யூடியூபில் பிரபலமானவர்களுக்கு அவார்டு கொடுக்கும் விழாவை நடத்தி வருகின்றனர். 2021 ஆம் ஆண்டிற்கான அவார்டு விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மைக் செட் ஸ்ரீராம் பெரும் சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

பிளாக் ஷீப் நடத்திய அந்த நிகழ்ச்சியில் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த மைக் செட் ஸ்ரீராம், கமல் தோள்பட்டையை தொட்டு, எவ்வளவோ பிரச்சனைகளை பற்றி பேசுகிறீர்கள், முரட்டு சிங்கிள் பிரச்சனையைப் பற்றி பேசுங்கள் என கேள்வி கேட்டுள்ளார்.

கேள்வி கேட்டதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மரியாதை மிக்க மனிதரை சக நண்பரின் தோளை தொட்டு பேசுவது போல மைக் செட் ஸ்ரீராம் நடந்துகொண்டது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களையும் தாண்டி இந்த செயல் பல சாதாரண மக்களையும் கோபப்படுத்தியுள்ளது என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.

ஒரு பொது மேடையில் எப்படி ஒருவரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தியதாக பிளாக் ஷீப் குழுவினர் மீதும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. மைக் செட் ஸ்ரீராம் விளையாட்டாக செய்தது தற்போது அவருக்கு விபரீதமாக முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.