பாத்ரூம் கூட போக முடியாது! புலம்பும் பிரபலம்.. எதிர்பார்ப்பை கிளப்பும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!! முழு விபரம் உள்ளே !

85

பொன்னியின் செல்வன்……

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னம் தனது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், த்ரிஷா, லால், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதற்கட்ட படிப்பிடிப்பு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கியுள்ளது. எனவே இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் பிரபல மலையாள நடிகர் லால், படப்பிடிப்பில் நிகழும் ஒரு சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், அரண்மனை போல் காட்சியளிக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து நடிகர்களும் ராஜா ராணி போலவே சுற்றித் திரிவார்கள்.

ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் மற்ற நடிகர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே அந்த காட்சியை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அங்குள்ள எல்லா பெரிய நடிகர்களுக்கும் இந்த மனநிலைமையுடன் தான் இருப்பார்கள்.

இருப்பினும் பிரம்மாண்ட படம் என்றால் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் தானே. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் இந்தப்படத்தில் நடிகர்களுக்கு கொடுக்கும் ஆடை அலங்காரம் ரொம்பவே வெயிட்டாக இருப்பதால், பாத்ரூம் போகக்கூட முடியாது.

மேலும் நடு ராத்திரி வரை ஷூட்டிங் போய்க்கொண்டே இருக்கும், வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இடைவெளி கிடைக்கும். மீண்டும் அதிகாலை ஐந்து மணிக்கே அடுத்த நாள் ஷூட்டிங்கை ஆரம்பித்து விடுவார் மணிரத்தினம்.

இதெல்லாம் எனக்கு ரொம்பவே புது அனுபவமாக இருந்தது என்று நடிகர் லால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.