சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த விமல்.. என்ன தெரியுமா ?

118

விமல்………..

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால் ரசிகர்களுக்கு தெரிந்தது ஒரு சில நடிகர்களின் சாதனைகள் மட்டும் தான் தெரியும். தமிழ் சினிமாவில் ஒரே ஒரு நடிகர் மட்டும் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறியவர் நடிகர் விமல். இவர் மணப்பாறை ஊரில் பிறந்து சினிமாவிற்காக சென்னையிலுள்ள கூத்துப்பட்டறையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

அதன்பிறகு விமல் கில்லி மற்றும் கிரீடம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மட்டும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. விமலுக்கு சமூக வலைதளங்கள் நிறைய கேலி, கிண்டல் என சரமாரியாக விமர்சனம் செய்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறாததால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தான் நடிகர் அவதாரம் எடுத்தார். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விமல் படங்கள் பண்ணிய சாதனை தெரியாது. விமல் நடிப்பில் வெளியான காஞ்சிவரம் மற்றும் பசங்க ஆகிய படங்கள் தொடர்ந்து தேசிய விருதை தட்டிச் சென்றன.

விமல் நடிப்பில் வெளியான வாகைசூடவா திரைப்படமும் தேசிய விருதை தட்டிச் சென்றது. இதுவரைக்கும் குறுகிய ஆண்டிலேயே அதிக படியான தேசிய விருதை யாரும் தட்டி செல்லவில்லை.

நடிகர் விமல் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆனால் ரசிகர்கள் யாரும் இதனை பெரிதளவு கண்டுகொள்ளாமல் அவரது படங்களின் கதாபாத்திரத்தை மட்டுமே குறை சொல்லி வருகின்றனர். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் மட்டுமே இந்த மாதிரியான சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.