வேற லெவல் இல்ல… வேற பேரே வைக்கணும் – கர்ணன் டீசரை புகழ்ந்த பிரபல இயக்குனர்!!

72

கர்ணன்………..

தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை பற்றி இயக்குனர் சுப்ரமணியம் சிவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில், தம்பி மாரி… #KarnanTeaser பார்த்தேன்… வேற லெவலா இல்ல… இதுக்கு பேரே வேற வைக்கனும்… ப்பா.. உன் #கர்ணன்… எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்… உன் குழு மொத்தத்திற்கும் மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.