நான் பல வருடங்கள் நடிக்காமல் இருந்ததற்கு இவர்தான் காரணம்.. உண்மையை மொத்தமாக போட்டுடைத்த கௌதமி!!

94

கவுதமி………..

சினிமாவில் ஆயிரம் நடிகைகள் வந்து போனாலும் ஒரு குறிப்பிட்ட சில நடிகைகளுக்கு மட்டும் காலம் கடந்தும் கிரேஸ் இருந்து கொண்டே இருக்கும். அப்படி தன்னுடைய இளம் வயதிலேயே சினிமாவில் தடம் பதித்தவர் தான் கவுதமி.

அன்றைய காலத்திலிருந்த அனைத்து நடிகர்களும் கௌதமியுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டினர். அதன் காரணமாக அன்றைய கால முன்னணி நடிகர்களுடன் ஏகப்பட்ட படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தளவுக்கு தன்னுடைய வசீகர தோற்றத்தால் அனைவரையும் வசியப்படுத்தி வைத்தார்.

சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்த கவுதமி திடீரென சுத்தமாக சினிமாவை விட்டு கிட்டதட்ட 15 வருடங்களுக்குமேல் ஒதுங்கியிருந்ததற்கான காரணம் என்ன என்பதை சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். கௌதமி 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. அடுத்த வருடமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

அதன் பிறகு சிலகாலம் தனிமையில் இருந்த கௌதமி பின்னர் நடிகர் கமல்ஹாசனுடன் 10 வருடங்களுக்கு மேல் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தார். அப்போது கூட சினிமாவில் நடிக்காமல் கமல் படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கௌதமி சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியது தன்னுடைய மகள் சுப்புலட்சுமி தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். தனியாக மகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என்ற கவலையில் சினிமாவை விட்டுவிட்டு வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தாராம்.

தற்போது தன்னுடைய மகள் தைரியமாக முடிவெடுக்கும் பெண்ணாக வளர்ந்து விட்டதால் இனி தைரியமாக தன் இஷ்டத்திற்கு சினிமாவில் நடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளுக்கு நடிப்பதில் ஆர்வமில்லை எனவும், ஒருவேளை வருங்காலத்தில் ஆசை வந்தால் அதற்கு எந்த தடையும் விதிக்க மாட்டேன் எனவும் கௌதமி குறிப்பிட்டுள்ளார். கௌதமி நடித்த படங்களில் உங்களுடைய ஃபேவரிட் என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கௌதமி கமலஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சில படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேற்கொண்டு அரசியலிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.