வலிமை படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் படம் தான்.. ஓப்பனாக காரணத்தை சொன்ன கார்த்திகேயா!

122

கார்த்திகேயா…

தல அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் வலிமை. கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக தல அஜித் நடிப்பில் எந்த படமும் வெளியாகாமல் இருப்பதால் இந்தப் படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி என்பவர் நடித்துள்ளார். மேலும் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டியில் கார்த்திகேயா வலிமை படத்தின் வில்லனாக நடிப்பதற்கு விஜய் படம் தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக விஜய்யின் படங்கள் தெலுங்கு சினிமாவில் அதிகம் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒருகாலத்தில் அடிமட்ட மார்க்கெட்டில் இருந்த விஜய்யின் படங்கள் தற்போது 25 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யும் அளவுக்கு மாறியுள்ளன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் கொரானா பிரச்சனைகளையும் தாண்டி பெரிய வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதைவிட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

இந்நிலையில் வலிமை படத்தில் வில்லனாக நடித்து வரும் கார்த்திகேயா தனக்கு வலிமை படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தைரியம் கொடுத்த படங்கள் என்றால் அது மாஸ்டர் விஜய் சேதுபதி கதாபாத்திரமும், நான் ஈ பட சுதீப் கதாபாத்திரமும் தான் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை ஹீரோவுக்கு இணையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டதால் இந்த இரண்டு படங்களையும் முன்னோடியாக வைத்துதான் வலிமை படத்தில் நடித்து வருகிறேன் என கார்த்திகேயா சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விரைவில் வலிமை படத்தின் இறுதிகட்ட கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்க இருப்பதாகவும் அப்டேட் ஒன்றை தல அஜித் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் கார்த்திகேயா. கார்த்திகேயா தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங்லீடர் எனும் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.