குருவை மிஞ்சிய சிஷ்யன்! இயக்குனர் ஷங்கரை விட அதிகமாக சம்பளம் பெறும் அட்லீ, இத்தனை கோடியா?

93

அட்லீ…

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன், இப்படத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லீ.

அப்படத்தை தொடர்ந்து அட்லீ ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.

அதன்பின் தளபதி விஜய் உடன் கூட்டணி சேர்ந்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்கக முடியாத வெற்றி இயக்குனராக மாறினார்.

இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து டபுள் ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ள அட்லீ, இப்படத்தின் பணிகளை கடந்த 2 வருடங்களாக செய்து வருகிறார்.

மேலும் இப்படத்திற்காக 40 கோடி வரை அட்லீக்கு சம்பளம் பேசப்பட்ட நிலையில் 35 கோடிக்கு இறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழில் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் -2’ படத்துக்காக ரூ.25 கோடி சம்பள ஒப்பந்தம் செய்ததே அதிகபட்சமாக இருந்தநிலையில் தற்போது குருவை மிஞ்சியுள்ளார் சிஷ்யன் அட்லீ.