200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பாகுபலி 3.. சொந்த காசில் ரிஸ்க் எடுக்கும் ராஜமௌலி! வியப்பில் ரசிகர்கள்..

118

பாகுபலி 3 ………..

தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமல்லாமல் மொத்த இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்த படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தெலுங்கு சினிமாவுக்கும் மட்டுமே தெரிந்த பிரபாஸ் என்ற நடிகரை உலக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது ராஜமௌலி தான். பாகுபலி படங்களுக்காக அவர்கள் போட்ட உழைப்பு பின்னர் பாராட்டு மழையாகப் பொழிந்தது.

இந்நிலையில் ராஜமௌலி தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் ஐந்து மொழிகளிலும் வெளியாகிறது.

இந்நிலையில் ராஜமௌலியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பாகுபலி 3 உருவாக உள்ளதாம். 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை ராஜமவுலி சொந்தமாக தயாரிக்கிறார்.

ஆனால் பாகுபலி 3 படத்தை 9 தொடர்களாக எடுத்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப் போகிறாராம் ராஜமௌலி. இதை நேரடி படமாக இருக்குமா அல்லது அனிமேஷன் படமாக இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பெரும்பாலும் அனிமேஷன் படமாக இருக்க தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ராஜமவுலி வட்டாரங்கள்.

சரியாக திட்டமிட்டு செய்யாவிட்டால் மொத்த காசையும் இதில் இழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் இதை கண்ணும் கருத்துமாக டைம் எடுத்து பொறுமையாக செய்ய உள்ளாராம் ராஜமௌலி.