அந்த கேரக்டருக்கு விஜய் சேதுபதி தான் சரி.. கேட்கிறத கொடுத்து கூட்டிட்டு வாங்க என அடம்பிடிக்கும் முன்னணி நடிகர்..!

152

விஜய் சேதுபதி…

கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் கேரியரில் ஜாக்பாட் அடித்தது போல தான். தெற்கிலிருந்து வடக்கு வரை விஜய் சேதுபதியின் பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களும் விஜய் சேதுபதியை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மாஸ்டர் பவானிக்கு இப்போது இந்தியா முழுவதும் செம கிராக்கி.

விஜய் படங்கள் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் படத்தில் நடித்து தெலுங்கு சினிமா மார்க்கெட்டை அசால்டாக பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி. அதன் விளைவு, தற்போது நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு தெலுங்கிலிருந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் பிரபல நடிகர் ராம்சரண் ஏற்கனவே மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த டிரைவிங் லைசன்ஸ் எனும் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார்.

ராம்சரண் வாங்கியதால் இந்த படத்தில் சிரஞ்சீவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிக்க உள்ளாராம்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என ஒத்தக் காலில் நிற்கிறாராம் ரவி தேஜா. ட்ரைவிங் லைசன்ஸ் என்ற படத்தில் பிருத்திவிராஜ் மற்றும் சுராஜ் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி தான் படமே நகரும்.

அந்த வகையில் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் ரவி தேஜாவும், சுராஜ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளார்களாம்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.