பாலிவுட் நடிகையுடன் செம்ம ஸ்டைலாக சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்… அதிர்ந்து போன ரசிகர்கள்!! நீங்களே பாருங்க….

158

சரவணன்………

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெரி இயக்கத்தில் சரவணன் நடிக்கும் இந்த படத்தில் நடிகை கீதிகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். வைரமுத்து, பா.விஜய், சிநேகன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சரவணன் ஹீரோவாக கலக்கும் இந்த படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நாயகி Urvashi Rautela இணைந்துள்ள தகவல் அண்மையில் கசிந்தது.

தற்போது மணலியில் மும்முரமாக இந்த படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஊர்வசி ராவ்டேலாவுடன் சரவணன் நடிக்கும் பரபரப்பு ஸ்டில்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.