சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதானா – அப்போ வேற லெவல் படம் தான்..!

166

சந்திரமுகி 2…

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தின் இரண்டாம் பாகம், சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் நடிக்க, பி. வாசு இயக்கவிருக்கிறார். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதை குறித்து செம சுவாரஸ்ய விஷயம் வெளியாகியுள்ளது.

இதில் ” சந்திரமுகி படத்தில் எப்படி ரஜினி, பிரபு குடும்பத்துடன் செல்லுகிறார்களோ, அதே போல் புதிதாக ஒரு குடும்பம் வேட்டையன் அரண்மனைக்குள் செல்கிறது.

உள்ளே வந்த பிறகு வேட்டையனிடம் அந்த குடும்பன் மாட்டிக்கொண்டு, அதன்பின் எப்படி தப்பிக்கிறது ” என்பது தான் படத்தின் மீதி கதையாம்.

இதில் வேட்டையனின் கதாபாத்திரம் மிகவும் கொ.டூ.ர.மான கதாபாத்திரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.