ஈ-யை வைத்து சீனை எடுத்த மணிரத்னம்.. அதுக்குதான் அந்த படம் டாப்ல இருக்கு..!

168

மணிரத்னம்…

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

கடல், ராவணன் மற்றும் காற்று வெளியிடை போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்த நிலையில் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் மீண்டும் இவரை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.

சினிமா வாழ்க்கையில் தோல்வி அடைவது சகஜம்தான். இவரது தோல்வியை காட்டிலும் சினிமாவில் வெற்றி அதிகமாகவே உள்ளது. இவர் படத்தில் காட்சி ஒன்றை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு நேரமானாலும் மெனக்கெட்டு அந்த காட்சியை எடுத்த முடிப்பாராம்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு சீன் எடுக்க வேண்டும் என்றால் அது ஒரிஜினாலிட்டி ஆக இருக்க வேண்டும் என்பதற்காக யோசித்து படப்பிடிப்புத் தளத்தில் அந்த காட்சியை எடுத்து முடிப்பார்.

அப்படி படத்தில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகளை உதாரணமாக சிலவற்றை பார்ப்போம்.

நாயகன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் இறப்பது போல் கதையை அமைத்துள்ளனர். ஒரு மனிதன் இறந்து எடுக்காவிட்டால் உடனே ஈ முற்றிவிடும்.

அதனை படத்தில் காட்ட வேண்டும் என்பதற்காக படத்தில் கமல் அணிந்த சட்டையில் சர்க்கரை நீரில் நனைத்து காயவைத்து கொடுத்துள்ளனர். பின்பு உண்மையாகவே படத்தில் கமல் அணிந்த சட்டையில் ஈ மொயத்துள்ளது.

அந்த அளவிற்குபடத்தில் ஒரு காட்சி எடுக்க வேண்டுமென்றால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்பே யோசித்து தத்ரூபமாக அந்த காட்சியை எடுத்து முடிப்பார். அதனால்தான் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு இவர் வளர்ந்துள்ளார் என பலரும் கூறியுள்ளனர்.