இனிமேல் யாரும் அண்ணாச்சின்னு கூப்பிடக்கூடாது.. ஸ்டைலா இப்படித்தான் கூப்பிடனுமாம்..! எப்படி தெரியுமா?

102

அண்ணாச்சி……..

வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் அண்ணாச்சி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அவதரித்து விட்டார். இவருடைய வருகையை எதிர்பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் தலைமையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட போகிறோம் என சொன்னபோது சரவணன் அருள் அண்ணாச்சி தன் பங்குக்கு கோடிகளை தூக்கி கொடுத்தார். அப்போதே அனைவரும் இவர் விரைவில் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று முணுமுணுத்தனர்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்து வந்தார். அதை பார்த்துவிட்டு சமூகவலைதளங்களில், கடன் வாங்கியாவது உன் கடையில் துணி எடுத்து விடுகிறோம், தயவு செய்து விளம்பரம் நடிக்க வேண்டாம் என பல நெகடிவ் விமர்சனங்கள் வெளிவந்தன.

தற்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்ததாக விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் அண்ணாச்சி. அண்ணாச்சியின் விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி-ஜெர்ரி இணைந்து இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்கூட அண்ணாச்சியின் புதிய பட புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தை கிடுகிடுவென நடுங்க வைத்தது குறிப்பிடத்தக்கது. மாஸில் அஜித்தும், கிளாஸில் விஜய்யும் கலந்த கலவை என சமூக வலைதளங்களில் போட்டி போட்டுக்கொண்டு அண்ணாச்சியின் புகைப்படங்களை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் அண்ணாச்சி தன்னுடைய வட்டாரங்களில் ஒரு புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். இனிமேல் தன்னை யாரும் சரவணன் அருள் அண்ணாச்சி என அழைக்கக் கூடாது எனவும், சரவணன் அல்லது சரோ என்று கூப்பிட்டு கொள்ளுங்களேன் எனக் கூறுகிறாராம். 51 வயதில் ஹீரோவாகி அண்ணாச்சி செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்