செல்வராகவனை 2வது திருமணம் செய்ய காரணம் இதுதான்.. 10 வருடம் கழித்து உண்மையை சொன்ன மனைவி கீதாஞ்சலி!!

112

செல்வராகவன்……

இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராக சாணிக் காகிதம் என்னும் படத்தின் மூலம் விரைவில் நடிகராக அறிமுகமாக உள்ளார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

செல்வராகவனுக்கு சினிமாவில் எப்படி பழைய ஏற்ற இறக்கங்கள் இருந்ததோ அதேபோல் அவருடைய சொந்த வாழ்க்கையிலும் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்தது. அவருடைய பட ஹீரோயினான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதன் பிறகு மீண்டும் செல்வராகவன் சில வருடங்களுக்கு முன்பு கீதாஞ்சலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கீதாஞ்சலி சமீபத்தில் செல்வராகவன் மீது காதல் வர காரணம் இதுதான் என கூறியிருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் எனும் படத்தின் கதையைப் படித்தேன்.

அந்த கதையை எனக்காகவே எழுதியது போல் இருந்தது என உணர்ந்து செல்வராகவன் தான் தன்னுடைய வாழ்க்கை என முடிவு செய்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.