பிக் பாஸ் 5வது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்!

113

பிக் பாஸ் 5……….

பிக் பாஸ் 5வது சீசன் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் , இந்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கமலுக்கு பதிலாக வேறு ஒரு நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

5வது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுவந்த நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் தொடங்கி உள்ளதாகவும், செட் அமைக்கும் பணிகள், போட்டியாளரை தேர்வு செய்யும் பணிகளையும் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் உலாவருகின்றன.

இந்நிலையில் 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் 5வது சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கட்சியை பலப்படுத்தும் வேலையில் கமல் தீவிரமாக இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், 5வது சீசனை கமல் தொகுத்து வழங்குவது சந்தேகமாக உள்ளது. 5வது சீசனை ஒருவேளை கமல் தொகுத்து வழங்க முன்வரவில்லை என்றால் , நடிகர் சிம்புவை வைத்து நிகழ்ச்சியை நடத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.