பிரபல சீரியலில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்… என்ன காரணம் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு!

126

ஜோவிடா……..

புகழ் பெற்ற நடிகர் மற்றும் கதாசிரியரான லிவிங்ஸ்டன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல பூவே பூச்சூடவா சீரியலிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவரது மூத்த மகள் ஜோவிடா சான் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அந்த சீரியலில் இருந்து தற்பொழுது விளக்கியுள்ளார். இது பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது “அனைவருக்கும் வணக்கம். கனத்த இதயத்துடன் உங்களுக்கெல்லாம் இந்த விஷயத்தை சொல்ல வருகிறேன்.

நான் பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலக இருக்கிறேன். நான் எனது உயர் படிப்புகளை தொடங்க இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த அருமையான வாய்ப்பளித்த சன்டிவி குடும்பத்திற்கு நான் எப்பொழுதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி. இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல எனது வாழ்க்கையில் நான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் உங்களுடைய ஆசீர்வாதங்கள் வேண்டும். சீக்கிரமே வேறொரு ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.