வனிதாவின் ஐந்தாவது கணவர் இவர்தான்.. ஓபன் ஆக போட்டுக்கொடுத்த பிரபலம்!!

196

வனிதா…….

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா. இவருடைய திரை வாழ்க்கையும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, செம டேமேஜ் ஆகி உள்ளது. அதிலும் கடந்த ஊரடங்கு நாட்களில் ரசிகர்களை என்டர்டைமெண்ட் செய்த விஷயமே வனிதா பீட்டர் பால் திருமணம் தான்.

ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவுடன் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவர் லிவிங் டுகெதர் முறையில் சில காலம் வாழ்ந்து வந்தார். பின்னர் அந்த காதல் முறிவுக்கு பிறகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா.

ஆனால் திருமணமான அடுத்த ஒரு மாதத்திலேயே அவரை அடித்துத் துரத்திவிட்டார். குடித்துவிட்டு மிகவும் டார்ச்சர் செய்வதாக கூறி அந்த கல்யாணத்தையும் முறித்துக்கொண்டார். பீட்டர் பாலை திருமணம் செய்யும்போது தமிழ் சினிமாவில் உள்ள பலரையும் பகைத்துக் கொண்டார் வனிதா.

இதனால் வனிதாவுக்கு இனி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் தற்போது அடுத்தடுத்து பல நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹீரோயினாகவும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் வனிதாவின் ஐந்தாவது கணவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர் ஹரி நாடார் என்பவர் தான் என குறிப்பிட்டுள்ளார். ஹரி நாடார் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து 2K அழகானது காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு ஹரி நாடார் மற்றும் வனிதா இருவரும் திருமணம் செய்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறியுள்ளது பல சலசலப்புகள் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வனிதாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.