குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஓரம்கட்ட வரும் சன் டிவியின் மாஸ்டர் செஃப்.. உலகத்தரத்தில் வெளியான புரோமோ வீடியோ!!

83

நிகழ்ச்சி…..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் தற்போது தமிழ்நாடே பேசப்படும் ரியாலிட்டி ஷோவாக மாறியுள்ளது. சமையல் கலையுடன் காமெடியையும் சேர்த்து கலக்கிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் போது எப்படி சன் டிவி இவ்வளவு அமைதியாக இருக்கிறது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறதல்லவா. தற்போது அவர்களும் களத்தில் இறங்கிவிட்டார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை பார்த்து மிரண்டு போன சன் டிவி நிறுவனம் அதேபோல சமையல் நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது. ஆனால் அது உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

மாப்பிள்ளை இவர்தான், ஆனா சட்டை என்னுடையது என்பதை போல சமையல் நிகழ்ச்சி தான், ஆனால் அதில் வித்தியாசம் இருக்கு என சன் டிவி நிறுவனம் தற்போது மாஸ்டர் செஃப் என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

உலகளவில் உள்ள பல போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும் அந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமே பிரம்மாண்டமாக இருந்தது இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது சன் டிவி நிறுவனம் தங்களுடைய அடுத்த ரியாலிட்டி ஷோவான மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இந்த வீடியோவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால் சன் டிவி நிறுவனம் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.