நடிகர் சோனு சூட்டை கவுரவப்படுத்திய ஸ்பைஸ்கெட் விமானம்! இதோ அந்த புகைப்படம்கள்……

64

சோனு சூட்…..

கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்தே மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

மேலும், ஊரடங்கின் போது வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார்.

சிலரை தனி விமானத்திலும் அனுப்பி வைத்தார். ஸ்பெயினில் தவித்த இந்திய மாணவர்கள் ஊர் திரும்ப உதவி, விவசாயிக்கு டிராக்டர் என சோனு சூட் அளித்த உதவிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவரின் உதவி ஒரு படி மேலாக துயரத்தில் தவிப்பவர்களுக்காக தனது சொத்துக்களையும் அடமானம் வைத்து உதவியது பல மக்களின் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்தது.

இதனால், ஒட்டுமொத்த தேச மக்களும் அவரை ஹீரோவாகவே பாவித்தனர். இப்படியும் ஒரு மனுசன் நடிகரா உள்ளாரா என பல திரைப்பிரபலங்களும் வியந்தனர்.

இந்நிலையில், இவரின் உதவிக்கும் பெருமைப்படுத்தும் விதமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒரு படி மேல் சென்று மிக உயரிய கவுரவத்தை அவருக்கு தந்துள்ளது.

அதில், விமானம் ஒன்றில் சோனு சூட்டின் படத்தை ஸ்டிக்கரிங் செய்து அதில் ‘ரட்சகர் சோனு சூட்டுக்கு ஒரு சல்யூட்’ என்ற வாக்கியத்தையும் பொறித்துள்ளது.

இதற்கு பதிலளித்த நடிகர் சோனு சூட், “மோகாவில் இருந்து மும்பைக்கு முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்தது நினைவுக்கு வருகிறது.

அனைவரின் அன்புக்கும் நன்றி. என்னுடைய பெற்றோர்களை அதிகம் மிஸ் செய்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.