விஜய் மாதிரி வருவ என ஆசைக்காட்டிய தளபதி தந்தை! நம்பி ஏமாந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

79

எஸ் ஏ சந்திரசேகர்……

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பவர் நடிகர் விஜய். தளபதி என்ற பெயரை பெற்று தமிழ் சினிமாவை தாண்டி பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று வருபவர்.

இவர் இந்த அளவிற்கு வளர ஆரம்பகாலத்தில் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். விஜய் மட்டுமில்லாது பல நடிகர்களின் படத்தில் புரட்சி கரமான படங்களால் உயர்த்திவிட்டவர்.

சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி படம் படுதோல்வியை சந்தித்து மோ ச மான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தளபதி மகனை வைத்து சினிமாவில் அறிமுகம் செய்யலாம என்று விஜய்யிடம் பேச்சு வார்த்தையில் உள்ளாராம். ஆனால் விஜய் வேண்டாம் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் இதன் காரணமாக அடுத்தது ஒரு நல்ல படத்தை இயக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

அதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் என்பவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதாக அவருக்கு உறுதி கொடுத்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் எல்லாம் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் ஊ ரடங்குக்கு பிறகு அந்த படத்தை பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் வெங்கட்டிடம், எஸ் ஏ சந்திரசேகர் படம் என்ன ஆனது? என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த வெங்கட், ஊரடங்கு காரணமாக அப்டேட் எதுவும் இல்லாமல் இருக்கிறது. எப்படியாவது நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார். ஆனால், படம் நி றுத்தப்பட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.