சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான 5 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? – வேறு எந்த நிறுவனமும் செய்யாத சாதனை!!

96

சன் பிக்சர்ஸ்…

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் படத்தை தயாரித்ததன் மூலம் தயாரிப்பு நிறுவனமாக அறிமுகமானது கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ்.

இதன்பின் தயாரிப்பில் இருந்து விலகி, சில ஆண்டுகள் படங்களை விநியோகம் செய்து வந்தது.

ஆனால் மீண்டும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பை துவங்கி வெற்றிகரமாக விளங்கி வருகிறது சன் பிக்சர்ஸ்.

மேலும் தற்போது விஜய்யின் தளபதி 65, ரஜினியின் அண்ணாத்த, தனுஷ் D44, சூர்யாவின் 40வது படம் என நான்கு படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இதுவரை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படங்களின் வசூல் விவரம் குறித்து லிஸ்ட் வெளியாகியுள்ளது.

எந்திரன் – ரூ. 290 கோடி

சர்கார் – ரூ. 252 கோடி

பேட்ட – ரூ. 220 கோடி

காஞ்சனா 3 – ரூ. 130 கோடி

நம்ம வீட்டு பிள்ளை – ரூ. 74 கோடி

இதன்முலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட படங்களில், எந்த ஒரு படமும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடையவில்லை.

இதனால் தோல்வி படம் தயாரிக்காத முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது சன் பிக்சர்ஸ்.