‘பாய்ஸ்’ படத்தை மிஸ் செய்தாரா த்ரிஷா? ஷங்கர் சொன்னது என்ன தெரியுமா?

84

த்ரிஷா…

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த படத்தில் கிட்டத்தட்ட அனைவருமே புதுமுகங்கள் நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பாக ஹரிணி கேரக்டரில் நடித்திருந்த ஜெனிலியா இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்திற்காக ஹரிணி கேரக்டருக்கான நடிகையை தேடியபோது த்ரிஷாவின் புகைப்படத்தை ஷங்கரிடம் காட்டியதாகவும்,

ஆனால் அவரை ஷங்கர் ரிஜக்ட் செய்து விட்டதாகவும் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

‘பாய்ஸ்’ படத்தின் நாயகியை தேடும் பணியில் இருந்தபோது மிஸ் மெட்ராஸ் நிகழ்ச்சிக்கு நாங்கள் சென்றிருந்தோம் என்றும், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற த்ரிஷா,

கிரீடம் சூட்ட வந்து இருந்தார் என்றும் அதனை அடுத்து அவரை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்து ஷங்கரிடம் சென்று காட்டிய போது ’இந்த பெண்ணிடம் ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது,

வேறு யாரையாவது தேடுங்கள், என்று ஷங்கர் எங்களிடம் கூறியபோது நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார். இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது